பா.ஜ. ஆட்சிக்கு facebook மறைமுக ஆதரவு

பா.ஜ. ஆட்சிக்கு facebook மறைமுக ஆதரவு

மோதி தலைமையிலான பாரதீய ஜனதா கட்சிக்கு (BJP) சட்டத்துக்கு முரணான முறையில் facebook ஆதவு செய்கிறது என்று அமெரிக்காவின் Wall Street Journal (WSJ) ஆய்வு கட்டுரை ஒன்று கூறுகிறது. இந்த ஆய்வு கட்டுரைக்கு WSJ தற்போதைய, மற்றும் முன்னாள் facebook ஊழியர்களுடன் WSJ உரையாடி தகவல்களை பெற்று உள்ளது.

facebook இணையத்தில் பொய்யான செய்திகள் பதிவுசெய்தல், வன்முறையை தூண்டும் செய்திகளை பதிவு செய்தல் போன்றன தடை செய்யப்பட்டுள்ளன. அதனால் அவ்வாறான பதிவுகள் facebook ஊழியரால் நீக்கப்படும்.

ஆனாலும் பா.ஜ. கட்சி உறுப்பினர்கள் பதிவு செய்யும் பொய்யான, முஸ்லீம்களுக்கு எதிரான, வன்முறையை தூண்டும் செய்திகளை facebook அழிப்பது இல்லை என்று WSJ கூறுகிறது. அவ்வாறு மோதியின் ஆதரவாளர்களின் பதிவுகளை நீக்குவது தமது நிறுவனத்தின் இந்திய வர்த்தகத்துக்கு ஆபத்தானது என்று facebook இந்திய கிளையின் உயர் அதிகாரி Ankhi Das ஊழியர்களுக்கு கூறியுள்ளார் ( “would damage the company’s business prospects in the country” ).

மோதிக்கு நெருக்கமான முகேஷ் அம்பானியின் (Mukesh Ambani) Relaince Jio என்ற தொழில்நுட்ப நிறுவனத்தில் facebook அண்மையில் $5.7 பில்லியன் முதலீடு செய்துள்ளது.

WSJ கட்டுரையின் பின் காங்கிரஸ் கட்சியின் Rahul Gandhi மேற்படி விசயம் தொடர்பாக விசாரணைகள் செய்யப்படவேண்டும் என்று கூறியுள்ளார். அத்துடன் காங்கிரஸ் மோதி அரசின் யுத்தவிமான கொள்வனவு தொடர்பாக விளம்பரம் ஒன்றை பிரசுரிக்க முனைந்தவேளை facebook மறுத்துள்ளது என்றும் Praveen Chakravarty என்ற காங்கிரஸ் அதிகாரி கூறியுள்ளார்.

இந்தியாவில் சுமார் 340 மில்லியன் facebook பாவனையாளர் உள்ளனர். அதனால் இந்தியாவே facebook நிறுவனத்தின் முதலாவது பெரிய சந்தை.