பிடுங்கிய கரட்டிலே வைர மோதிரம்

RingOnCarrot

கனடாவின் Edmonton நகருக்கு தெற்கே உள்ள Armena என்ற சிறுநகரில் அறுவடை செய்யப்பட்ட கரட் ஒன்றில் ஒரு வைர மோதிரம் இருந்துள்ளது. விசாரணைகளின் பின் இந்த மோதிரம் Mary Grams என்பவருக்கு சொந்தமானது என்றும் 2004 ஆம் ஆண்டில் தொலைந்துள்ளது என்றும் அறியப்பட்டு உள்ளது.
.
Mary இந்த வைரத்தை 1951 ஆம் ஆண்டு முதல் கொண்டிருந்துள்ளார். அவரும் அவரது கணவரும் Armena என்ற இடத்தில் முன்னர் கமம் செய்துள்ளனர். 2004 ஆம் ஆண்டில் பற்றைகளை பிடுங்கி அழிக்கும் போது இந்த வைர மோதிரம் தொலைந்து உள்ளது. கணவருக்கு தெரியாமல் Mary இன்னோர் மோதிரத்தை உடனடியாக கொள்வனவு செய்துள்ளார்.
.
அந்த கமத்தில் தற்போது வாழும் மேரியின் மருமகள் Colleen Daley அண்மையில் தமது கரட் அறுவடையின் போது இந்த மோதிரத்தை கண்டுள்ளார். அவருக்கு மாமியின் மோதிரம் தொலைந்த கதை தெரிந்து இருக்கவில்லை. ஆனால் அவரின் கணவர் கிடைத்தது தனது தாயின் மோதிரம் என்பதை அறிந்துள்ளார்.
.
தற்போது 84 வயதுடைய மேரி இன்னோர் இடத்தில் வாழ்கிறார். அவரின் கணவர் 5 வருடங்களின் முன் இறந்துள்ளார்.
.

மேற்படி கமம் 105 வருடங்களாக மேரியின் குடும்ப சொத்தாக இருந்து வந்துள்ளது.
.