பிரான்சின் உதவியுடன் 12 நீர்மூழ்கிகள் கட்டும் ஆஸ்திரேலியா

ShortfinBarracuda

தனது கடல்படையை நவீனப்படுத்தி பலப்படுத்த ஆஸ்திரேலியா 12 புதிய Shortfin Barracuda வகை நீர்மூழ்கி கப்பல்களை கட்ட தீர்மானம் எடுத்திருந்தது. ஆனால் ஆஸ்திரேலியாவிடம் நீர்மூழ்கிகளுக்கான நவீன தெழில்நுட்ப வசதிகள் இல்லை. அதனால் ஆஸ்திரேலியா தொழில்நுட்பம் கொண்ட நாடு ஒன்றுடன் இணைந்து நீர்மூழ்கிகளை தயாரிக்க முடிவு செய்தது.
ஜப்பான், ஜெர்மனி, பிரான்ஸ் ஆகிய நாட்டு நிறுவனங்கள் போட்டி போட்டன. இறுதியில் பிரான்சின் DCNS (Direction des Constructions Navales Services) தெரிவு செய்யப்பட்டுள்ளது.
.

இந்த 12 புதிய நீர்மூழ்கிகளும் $38 பில்லியன் செலவில் கட்டப்படும். இவை ஒவ்வொன்றும் 4,500 தொன் எடையுடையதாக இருக்கும். ஆனாலும் இவை பழைய முறையிலான டீசல்-மின்கலம் உதவியுடன் இயங்கும் நீர்மூழ்கிகளாக இருக்கும். இவை அனைத்தும் Adelaide நகரில், ஆஸ்திரேலிய உருக்கை பயன்படுத்தி கட்டப்படும்.
.
இந்த செய்தி மூலம் ஜூலை 2ஆம் திகதி ஆஸ்திரேலியாவில் இடம்பெறவுள்ள தேர்தலில் ஆதரவை அதிகரிக்கவும் லிபரல் கட்சி முனைந்துள்ளது.
.