பிரான்ஸில் கூட்டத்துள் மோதிய வாகனம், 73 வரை பலி

France

பிரான்ஸின் தேசிய தினமான Bastille Day நிகழ்வு ஒன்றுள் வேகமாக சென்ற வாகனம் ஒன்று மோதியதில் சுமார் 73 பேர் பலியாகி உள்ளனர். மேலும் 100 இக்கும் அதிகமானோர் காயமடைந்து உள்ளனர். இன்று 14 ஆம் திகதி பிரான்ஸின் தென் பகுதியில் உள்ள Nice என்ற இடத்திலேயே இந்த தாக்குதல் இடம்பெற்று உள்ளது.
.
அந்நாடு தொலைக்காட்சி சேவையான BFM TV தெரிவித்த கருத்துப்படி வெள்ளை நிற வாகனம் ஒன்று தேசிய தின நிகழ்வில் கலந்திருந்த கூட்டத்துள் புகுந்து அங்கிருந்த மக்களை மோதியுள்ளது.
.
மக்கள் வாணவேடிக்கையை பார்த்துக்கொண்டு இருக்கையிலேயே இந்த வாகன தாக்குதல் இடம்பெற்று உள்ளது என்று Nice-Matin பத்திரிகை கூறுகிறது.
.
முதலில் இந்த வாகனம் குண்டு ஒன்றை வெடித்திருந்தது என்று தவறான தகவல் வெளியாகி இருந்தது.
.