பிரித்தானியாவில் திடீர் தேர்தல்

UK

பிரித்தானியாவின் பிரதமர் Theresa May திடீர் தேர்தலுக்கு இன்று அழைப்பு விடுத்துள்ளார். இந்த திடீர் தேர்தல் வரும் ஜூன் மாதம் 8 ஆம் திகதி இடம்பெறும்.
.
உண்மையில் அடுத்த தேர்தல் 2020 ஆம் ஆண்டிலேயே நடாத்தப்படல் வேண்டும். பிரித்தானியாவில் தேர்தல் திகதிகள் நிரந்தரமானவை (fixed) என்றாலும் சில காரணங்களுக்காக தேர்தல் முன்கூட்டியே நடாத்தப்படலாம். அரசில் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொள்ளல், பாராளுமன்றில் 2/3 பெரும்பான்மை பெறல் போன்ற சில காரணங்கள் முன்தள்ளிய தேர்தலுக்கு காரணி ஆகலாம்.
.
எதிர் கட்சியான  Labour Party மிகவும் குலைந்து, ஆதரவு குறைந்து உள்ளதால் தனக்கு பலமான பாராளுமன்றை அமைக்கும் நோக்கிலேயே பிரதமர் இவ்வாறு 3 வருடங்கள் முன் தேர்தலை நடாத்தவுள்ளார். பிரதமரின் Conservative கட்சி அறுதி பெரும்பான்மை கொண்டால், ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறும் நடவடிக்கைகளை எதிர் கட்சியான Labour குழப்ப முடியாமல் போகும்.
.
இவ்வாறு தேர்தலை முன்னரே நடாத்த மாட்டேன் என்று பலதடவைகள் கூறிய பிரதமரே இவ்வாறு திடீர் என்று அறிவித்துள்ளார். குழம்பி உள்ள எதிர்கட்சிக்கு இது நல்ல நேரம் இல்லை என்றாலும், பிரதமர் எடுத்த முடிவு சிலவேளைகளில் அவருக்கு ஆபத்தானது ஆகவும் மாறலாம்.
.

எதிர்க்கட்சி ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறுவதை பெரிதும் விரும்பி இருந்திருக்கவில்லை.
.