பிரித்தானியாவில் பாராளுமன்றம் இடைநிறுத்தம்

UK_EU

அண்மையில் பிரித்தானியாவின் பிரதமர் பதவியை கைப்பற்றிக்கொண்ட Boris Johnson திடீரென பிரித்தானியாவின் பாராளுமன்றை இடைநிறுத்தம் செய்து கொண்டதை எதிரணிகள் வன்மையாக கண்டிக்கின்றன. இணக்கம் எதுவும் இன்றி (no-deal Brexit) ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறுவதை நடைமுறை செய்யவே பிரதமர் இவ்வாறு செயல்பட்டதாக எதிரணிகள் கூறுகின்றன.
.
நேற்று புதன்கிழமை அறிவிக்கப்பட்ட இந்த திட்டப்படி செப்டெம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் மொத்தம் 5 கிழமைகள் பிரித்தானிய பாராளுமன்றம் இடைநிறுத்தம் செய்யப்படும்.
.
ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேற விரும்பாத மனோநிலையை கொண்ட பிரித்தானியர் குறைந்தது no-deal வெளியேற்றத்தையாவது தவிர்க்க முயல்கின்றனர். அவர்கள் குறைந்தது ஐரோப்பிய ஒன்றியத்துடன் ஒரு இணக்கத்தை ஏற்படுத்தியே வெளியேற விரும்புகின்றனர்.
.
2017 ஆம் ஆண்டு இடம்பெற்ற பாராளுமன்ற வாக்கெடுப்பில் 498 பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்கள் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறவும், 114 உறுப்பினர்கள் தொடர்ந்தும் ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கம் வகிக்கவும் வாக்கு அளித்திருந்தனர். அந்த வாக்களிப்பின்படி வரும் அக்டோபர் மாதம் 31 ஆம் திகதிக்கு முன் பிரித்தானிய ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேற வேண்டும்.

.