பிரித்தானியா, சீனா, $62 பில்லியன் வர்த்தக ஒப்பந்தங்கள்

China-UK

தற்போது பிரித்தானியாவுக்கு உத்தியோகபூர்வ பயணம் ஒன்றை மேற்கொண்டுள்ள சீனாவின் ஜனாதிபதி Xi JinPing பல வர்த்தக ஒப்பந்தங்களை மேற்கொண்டு வருகிறார். இந்த ஒப்பந்தங்களின் மொத்த பெறுமதி $62 பில்லியன் என கூறப்பட்டுள்ளது. சீன ஜனாதிபதியும், பிரித்தானிய பிரதமர் David Cameronம் இன்று புதன் Downing Street இல் உள்ள பிரதமரின் இல்லத்தில் சந்தித்துள்ளனர்.
.
இந்த ஒப்பந்தங்களின்படி சீனா 3 அணுமின் உற்பத்தி நிலையங்களை கட்டுமானம் செய்யவுள்ளது. Hinkley Point என்ற பிரித்தானியாவின் தென்மேற்கே உள்ள பிரதேசத்தில் ஒரு அணுமின் நிலையம் அமையவுள்ளது. இந்த நிலையத்தில் சீனா $9 பில்லியன் முதலிடவுள்ளது. பதிலாக சீனா இந்த நிலையத்தின் 33.5% உரிமையை கொண்டிருக்கும். மற்றுமோர் அணுமின் நிலையத்தில் சீன 2/3 பங்கை கொண்டிருக்கும், அத்துடன் சீனாவின் தொழில்நுட்பத்தையே அந்த நிலையத்தில் பயன்படுத்தும்.
.
கப்பல் கட்டுமானம், விமான இயந்திரங்கள் தயாரித்தல், சீனாவில் வைத்தியசாலை கட்டுதல் போன்ற திட்டங்களும் இந்த ஒப்பந்தங்களுள் அடங்கும்.
.

முதல் தடவையாக சீன அரசின் bondகளை  பிரித்தானியாவில் கொள்வனவு செய்ய வசதிகளும் செய்யப்படும்.
.