பிரித்தானியா செல்லவிருந்த தமிழருக்கு 8 மாத சிறை

Singapore

சிங்கப்பூர் ஊடாக பிரித்தானிய செல்லவிருந்த இரண்டு இலங்கை தமிழர் சிங்கப்பூரில் கைது செய்யப்பட்டு, சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளனர். சிங்கப்பூரின் Changi விமான நிலையத்தில் 46 மற்றும் 27 வயதுடைய இந்த இரண்டு இலங்கை தமிழரும் ஜூன் 19ஆம் திகதி கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு 8 மாத சிறை தண்டனை வழங்கப்படுள்ளது.
.
சிங்கப்பூர் அதிகாரிகளின் அறிக்கைப்படி, இந்த இருவரும் கொழும்பில் இருந்து சிங்கப்பூருக்கு இலங்கை கடவு சீட்டில் ஜூன் 18 ஆம் திகதி பயணித்து உள்ளனர். மறுநாள் இவர்களுக்கு மலேசிய வாசியான 31 வயதுடைய ஒருவர் பிரித்தானியாவுக்கான கடவு சீட்டுகளை வழங்கி உள்ளார்.
.
இருவரில் ஒருவர் 19 ஆம் திகதி Changi விமான நிலைய Terminal 1 இல் தனது பிரித்தானியாவுக்கான boarding passஐ பெற முயன்றுள்ளார். மற்றவர் தொலைவில் இருந்து அவதானித்துள்ளார். Boarding pass வழங்கல் நீண்ட நேரம் எடுத்தமையால், அவர் அவ்விடத்தை விட்டு அகன்று, இலங்கை போகும் நோக்கில் Terminal 3க்கு சென்றுள்ளார்.
.
Terminal 3யில் இந்த இருவரையும் மலேசிய நாட்டவர் சந்தித்து உள்ளார். அவ்விடத்தில் வைத்து சிங்கப்பூர் அதிகாரிகள் மூவரையும் கைது செய்துள்ளனர்.
.

இவர்கள் இருவரும் 330,000 இலங்கை ரூபாய்கள் முதல் 1 மில்லியன் ரூபாய்ளை முகவருக்கு வழங்கி உள்ளதாக கூறப்படுகிறது.
.