பிரித்தானிய தேர்தல் ஒரு வியாழ மாற்றம்?

UKElection

நாளை வியாழன் பிரித்தானியாவில் பொது தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தலுக்கு இரண்டு நாட்களிலும் குறைவான காலமே இருந்தும் தேர்தல் முடிவுகளை கணிப்பிட முடியாமல் உள்ளது. காரணம் எந்த ஒரு கட்சியும் மக்களை உறுதியாக ஆட்கொள்ளவில்லை. அனேகமாக சிறுபான்மை வெற்றிபெறும் கட்சி ஒன்றே இன்னுமோர் கட்சியுடன் இணைந்து கூட்டு அரசு அமைக்கும் என எதிர் பார்க்கப்படுகிறது.
.
தற்போதைய நிலவரப்படி மொத்தம் 650 ஆசனங்களில் எந்தவொரு கட்சியும் 326 ஆசனங்களை கைப்பற்ற போவது இல்லை என கருதப்படுகிறது. Yougov கருத்து கணிப்பின்படி பழம்பெரும் கட்சிகளான Miliband தலையிலான Labour கட்சி 276 ஆசனங்களையும் Cameron தலைமயிலான Tories 272 ஆசனங்களையும் மட்டுமே வெல்லும். Liberal Democrats (2010 ஆம் ஆண்டில் 57 ஆசனங்களை வென்றிருந்தது), SNP – Scottish National Party, UKIP – UK Independence Party போன்றன மிகுதி ஆசனங்களை வெல்லும். SNP 2010 ஆம் ஆண்டில் 6 ஆசனங்களை மட்டுமே வென்றிருந்தாலும் இம்முறை சுமார் 40 முதல் 50 ஆசனங்களை வெல்லலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
.
குடிவரவு, தேசிய வைத்திய சேவை, பொருளாதாரம், ஐரோப்பிய ஒன்றியத்துள் தொடர்ந்தும் இருப்பது போன்ற விடயங்கள் இந்த தேர்தலில் முக்கிய பங்கு வகிக்கின்றன.