பிரித்தானிய பிரதமரையும் தொற்றியது கொரோன

BorisJohnson

பிரித்தானிய பிரதமர் Boris Johnson (வயது 55) ஐயும் கொரோனா வரைஸ் தொற்றி உள்ளது என்று பிரதமர் கூறியுள்ளார். ஆனாலும் தான் தொடர்ந்தும் பிரதமர் பணிகளை தொடர உள்ளதாகவும் அவர் கூறி உள்ளார்.
.
பிரதமர் தனக்கு நேற்று வியாழக்கிழமை நோய்க்கான அறிகுறி தென்பட்டதாகவும், பரிசோதனைகள் அவருக்கு கொரோனா தொற்றியதை உறுதி செத்ததாகவும் கூறி உள்ளார். அதனால் தான் வீட்டில் இருந்து பணிபுரிய உள்ளதாக அவர் கூறியுள்ளார்.
.
இதுவரை 578 பேர் பிரித்தானியாவில் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். அத்துடன் 11,658 பேர் கொரோனா தொற்று கொண்டுள்ளனர்.
.
ஏற்கனவே 71 வயதான இளவரசர் சார்ள்ஸ் (Prince Charles) கொரோனா தொற்றி கொண்டுள்ளார்.
.
அஸ்ரேலிய Home Affairs அமைச்சர் Peter Dutton,  கனடிய பிரதமரின் மனைவி Sophie Trudeau, ஐரோப்பிய ஒன்றிய அதிகாரி Michel Barnier, பிரான்சின் கலாச்சார அமைச்சர் Frank Riester ஆகியோரும் காரோண தொற்றுக்கு உள்ளாகினர்.
.
ஈரானில் 24 அரசியல்வாதிகள் கொரோனா தொற்றுக்கு உள்ளாகினர். அவர்களில் இருவர் பலியாகியும் உள்ளனர்.
.