பீகார் மாநிலத்தையும் இழக்கும் மோடி

Bihar

மோடி இந்திய ஆட்சியை கைப்பற்றியபோது இந்திய மக்கள் அவர் மீது பெரும் எதிர்பார்ப்பை வைத்திருந்தனர். ஆனால் அண்மைகால இந்திய தேர்தல் முடிவுகள் மோடி தனது ஆளுமையை இழந்து செல்வதை காட்டுகின்றன. தற்போது வெளிவந்துகொண்டிருக்கும் பீகார் மாநில தேர்தல் முடிவுகள் மோடி தலைமையிலான கட்சி 40% ஆசனங்களை இழந்துள்ளதாக கூறுகின்றன.
.
பீகார் தேர்தலில் BJP இம்முறை 58 ஆசனங்களை மட்டுமே எடுக்கும் எனவும், இவர்களுக்கு எதிராக போட்டியிட்ட மாநில கட்சி கூட்டணி 178 ஆசனங்களை எடுக்கும் எனவும் கூறப்படுகிறது.  சனத்தொகையில் இந்தியாவின் 3வது பெரிய மாநிலமான பீகார் சுமார் 103 மில்லியன் மக்களை கொண்டது.
.
மோடி கட்சி கடந்த பெப்ருவரி மாதத்தில் டெல்கி மாநிலத்தையும் இழந்திருந்தது. அங்கே மொத்தம் 70 ஆசனங்களில் Aam Aadmi கட்சி 67 ஆசனங்களை வென்றிருக்க மோடி தலைமையிலான BJP 3 ஆசனங்களை மட்டுமே வென்றிருந்தது.
.

மோடி ஆட்சிக்கு வந்த நாள் முதல் BJP சார்பான இந்து வன்முறையாளர் சட்டத்தை தம் கையில் எடுத்து வன்முறைகளில், குறிப்பாக இந்திய முஸ்லீம்களுக்கு எதிரான வன்முறைகளில் இறங்கி இருந்தனர். அதை மோடி அரசு கண்டிக்கவில்லை.
.