புதன்கிழமை பாகிஸ்தான் தேர்தல்

Pakistan

வரும் புதன்கிழமை, ஜூலை 25 ஆம் திகதி, பாகிஸ்தானில் தேர்தல் இடம்பெறவுள்ளது. வளமை போலவே இம்முறையும் அங்கு தேர்தல் வன்முறைகளின் மத்தியில் இடம்பெறவுள்ளது. கடந்த ஒரு கிழமையில் மட்டும் சுமார் 160 பேர் தேர்தல் வன்முறைகளுக்கு பலியாகி உள்ளனர்.
.
முன்னாள் கிரிக்கெட் வீரராக இம்ரான் கான் (Imran Khan, வயது 65) இம்முறை பாகிஸ்தான் இராணுவத்தின் விருப்பத்துக்குரிய போட்டியாளராக உள்ளார் என்று கூறப்படுகிறது. ஆனால் அவரின் கட்சியான PTIயும், இராணுவதினரும் அவ்வாறு தமக்குள் எந்தவிதமான இரகசிய தொடர்புகளும் இல்லை என்று கூறியுள்ளனர்.
.
மூன்று தடவைகள் பிரதமராக இருந்த முன்னாள் பிரதமர் நவாஸ் ஷரீபின் (Nawaz Sharif, வயது 68) PML-N கட்சியும் பலமுடன் உள்ளது. ஆனால் நவாஸ் ஷரீபும், அவரது மகள் Maryamமும் தற்போது சிறைத்தண்டனை பெற்றுள்ளனர். பிரித்தானியாவில் வசித்த இவர்கள் இருவரும் இந்த மாதமே சிறை செல்லும் நோக்கில் பாகிஸ்தான் திரும்பி இருந்தனர். Panama Paper விவகாரத்தில் இவர்கள் குற்றவாளிகள் என்று தீர்ப்பு கூறப்பட்டிருந்தது.
.
முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோவின் மகன் Bilawal Zardari (வயது 29) தலைமையில் PPP கட்சியும் கூடவே போட்டியிடுகிறது.
.
மொத்தம் 272 ஆசனங்கள் கொண்ட அவையில் எந்தவொரு கட்சியும் அறுதி பெரும்பான்மை வெற்றியை அடையாதுவிடின், வரும் ஆட்சி நீடிப்பது சுலபமான காரியமாக அமையாது.
.