புதிய SilkAir சிங்கப்பூர்-இலங்கை விமானசேவை

SilkAir

 

சிங்கப்பூர் விமானசேவையின் (Singapore Airlines) கிளை விமானசேவையான SilkAir சிங்கப்பூருக்கு கொழும்புக்கும் இடையில் விமான சேவையை ஆரம்பித்து உள்ளது. இந்த புதிய சேவைப்படி, SillAir சிங்கப்பூரில் இருந்து புதன், வியாழன், சனி ஆகிய மூன்று நாட்களில் நாட்களில் கொழும்பு நோக்கி பறந்து, அதே தினங்களில் மீண்டும் சிங்கப்பூர் பறக்கும். SilkAir சேவையின் முதல் சேவை நேற்று சனிக்கிழமை இடம்பெற்றது.
.
சிங்கப்பூரில் இருந்து கொழும்புக்கான சேவை Flight MI428 ஆகவும், கொழும்பில் இருந்து சிங்கப்பூருக்கான சேவை Flight MI427 ஆகவும் இருக்கும். SilkAir Boeing 737-800 வகை விமானங்களை கொழும்பு சேவைக்கு பயன்படுத்தும்.
.
Singapore Airlines சேவையும் SilkAir சேவையும் கூட்டாக தற்போது சிங்கப்பூரில் இருந்து கொழும்புக்கு மொத்தம் 10 விமான சேவைகளை செய்கின்றன.
.