புலிகளை அழிக்க இந்தியா உதவியது என்கிறார் மேனன்

Menon

2009 ஆம் ஆண்டில் புலிகளை அழிக்க இந்தியாவும் உதவியது என்கிறார் முன்னாள் இந்திய வெளியுறவு செயலர் சிவசங்கர் மேனன். இவர் அண்மையில் வெளியிட்டுள்ள Choices: Inside the Making of India’s Foreign Policy என்ற புத்தகத்திலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டு உள்ளார்.
.
இந்தியாவின் RAW அமைப்பு LTTE, PLOTE, EROS, EPRLF, TELA ஆகிய இலங்கை தமிழ் ஆயுத குழுக்களுக்கு ஆயுத பயிற்சி வழங்கி ஆதரித்ததையும் இவர் தனது புத்தகத்தில் குறிப்பிட்டு உள்ளார்.
.
புலிகளின் அழிவுக்கு இந்தியா இலங்கைக்கு வழங்கிய தகவல்களும் (intelligence and interdiction) உதவியதாக அவர் கூறி உள்ளார். புலிகளின் அழிவுக்கு முன்னரான 5 மாதங்களுக்குள் தானும், பிரணாப் முகர்ஜீயும் பலதடவைகள் பகிரங்கப்படுத்தப்படாத விமானங்களில் இலங்கை வந்து ஜனாதிபதி ராஜபக்ஸவையும் இராணுவ தலைவர் பொன்சேகாவையும் சந்தித்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
.

இந்தியாவின் நலன்களுக்காவே இந்தியா இலங்கையின் புலிகள் மீதான இறுதி போரில் இலங்கைக்கு உதவியதாகவும் அவர் கூறியுள்ளார். இலங்கை அரசு சீனா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளிடம் உதவியை பெற்று யுத்தத்தை வெல்ல இருக்கும் நேரத்தில் இந்தியாவும் தலையிட வேண்டிய நிலையில் இருந்தது என்கிறார் அவர். அவ்வாறு செய்யாதுவிடின் ராஜீவ் காந்தியை புலிகள் கொலை செய்ததை ஆதரிப்பதாக கருதப்படும் என்றும் கூறியுள்ளார்.
.