போர்னியோவில் 40,000 வருட பழைய ஓவியம்

BorneoPaint

போர்னியோ (Borneo) தீவில் உள்ள குகை ஒன்றுள் சுமார் 40,000 வருடங்களுக்கு முன்னர் வரையப்பட்ட ஓவியம் ஒன்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. தற்போது இதுவே அறியப்பட்ட அதி பழைய ஓவியமாகும்.
.
புரூணை (Brunei) என்ற நாட்டையும், இந்தோனேசியா, மலேசியா ஆகிய நாடுகளின் பகுதிகளையும் கொண்ட போர்னியோ என்ற தீவில் உள்ள மலைகளுக்கு கீழான குகை ஒன்றிலேயே இந்த ஓவியம் காணப்பட்டுள்ளது. தென்னாசிய வகை மாடு ஒன்றின் ஓவியமே சுமார் 40,000 வருடங்களுக்கு முன்னர் வரையப்பட்டது என்று கணிப்பிடப்பட்டு உள்ளது.
.
இந்த குகை பகுதியில் சுமார் ஆயிரம் ஓவியங்கள் இருப்பினும், மாட்டு ஓவியமே அதி பழையது என்று கூறப்படுகிறது. அங்குள்ள மனித கை ஓவியங்கள் சுமார் 37,000 வருடங்கள் பழமையானவை என்றும் கூறப்பட்டுள்ளது.
.
இந்த ஓவியத்தை அஸ்ரேலியாவின் Queensland நகரில் உள்ள Griffith University ஆய்வாளர்களே கண்டுள்ளனர். இந்த விபரத்தை Nature என்ற அமைப்பு இன்று வெளியிட்டு உள்ளது.
.

YouTube வீடியோ

.