மகேந்திரன் இலங்கைக்கு நாடு கடத்தப்படலாம்?

ArjunaMahendran

இலங்கை மத்திய வங்கியின் தலைவரை இலங்கைக்கு நாடு கடத்துமாறு இலங்கை சிங்கப்பூரை கேட்கவுள்ளது. தற்போது சிங்கப்பூரில் வாழும் சிங்கப்பூர் வாசியான இவர் மீது $74 மில்லியன் ஊழல் (insider trading) குற்றம் சுமத்தப்பட்டு உள்ளது.
.
2015 ஆம் ஆண்டில் இவர் சில வர்த்தக உண்மைகளை தனது மருமகனுக்கு வழங்கி இலாபம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது. இவரது மருமகன் அப்போது மகேந்திரனின் முதலீடுகளை மேற்பார்வை செய்தவர்.
.
மகேந்திரன் இலங்கை அரசுக்கு $11 மில்லியன் நட்டம் ஏற்படவும் காரணமாக இருந்தார் என்று ஜூன் மாத குற்ற தாக்கல் ஒன்றும் உள்ளது.
.
கடந்த மார்ச் மாதம் இலங்கை மகேந்திரனை நாடு கடத்தும்படி கேடிருந்தும், சிங்கப்பூர் உரிய ஆதாரங்களை கேட்டிருந்தது. தற்போது இலங்கை 21,000 பக்கங்கள் கொண்ட ஆதாரங்ககளை வழங்குகிறது.
.
மகேந்திரனை பிரதமர் ரணிலே மத்திய வங்கி பதவிக்கு எடுத்ததாக கூறப்படுகிறது.

.