மரணப்படுக்கையில் Thomas Cook

ThomasCook

1841 ஆம் ஆண்டு Thomas Cook என்ற பிரித்தானியரால் ஆரம்பிக்கப்பட்ட உலகின் மிக பழைய உல்லாச பயண முகவர் நிறுவனமான Thomas Cook தற்போது முதிலீட்டு தொல்லையால் மரண படுக்கையில் உள்ளது. போதிய மேலதிக முதலீடு இந்த கிழமைக்குள் கிடைக்காவிடில் அந்நிறுவனம் இழுத்து மூடப்படலாம். தற்போது இந்த நிறுவனத்தின் மூலம் உல்லாச பயணத்தை மேற்கொண்டுள்ள சுமார் 600,000 பயணிகளும் இடைநடுவில் கைவிடப்படலாம். இதில் 160,000 பேர் பிரித்தானியர்.
.
சீனாவின் Fosun Tourism Group என்ற நிறுவனம் உட்பட சில முதிலீட்டாளர் ஏற்கனவே $1.25 பில்லியன் வெகுமதியை முதலிட முன்வந்துள்ளனர். ஆனால் Tomas Cook மேலும் $250 மில்லியன் முதலீட்டுக்கு முனைகிறது. பின்னைய முயற்சி இதுவரை கைகூடவில்லை. அதனால் முன் கூறப்பட்டவர்களும் பின்வாங்கலாம் என்ற அச்சம் தற்போது தோன்றியுள்ளது.
.
பதிலாக $250 மில்லியன் முதலீட்டுக்கு பிரித்தானிய அரசின் உதவியையும் நாடுகிறது Thomas Cook. பிரித்தானிய அரசு தரப்பில் இருந்து இதுவரை திடமான பதில் எதுவும் கூறப்படவில்லை.
.
உலக அளவில் சுமார் 22,000 பேர் Thomas Cook நிறுவனத்தில் பணிபுரிகின்றனர். பிரித்தானியாவில் மட்டும் 9,000 பேர் பணிபுரிகின்றனர்.
.