மலேசியன் விமானம் MH370வின் பாகம்?

Reunion

இந்து சமுத்திரத்தின் மேற்கு பகுதியில், மடகாஸ்கருக்கு (Madagascar) கிழக்காக உள்ள Reunion என்ற தீவில் கரை ஒதிங்கியுள்ள விமான பாகம் ஒன்று கடந்த வருடம் காணாமல் போயிருந்த மலேசிய விமானம் MH370 இன் பாகமா என்பதை ஆராய அதிகாரிகள் அனுப்பப்பட்டுள்ளார்கள். இங்கு ஒதிங்கியுள்ள பாகம் சுமார் 2 மீட்டர் நீளமானதாகும்.
.
ஒதிங்கியுள்ள பாகம் Boeing 777 வகை விமானத்தின் இறகுகளில் உள்ள flaperon என்ற பாகாமாக தெரிகிறது என்று ஓர் அதிகாரி கூறியுள்ளார். 2014 ஆம் ஆண்டு கோலாலம்பூரில் இருந்து பெய்ஜிங் நோக்கி செல்கையில் காணாமல் போயுள்ள MH370 விமானமும் ஒரு Boeing 777 விமானமே. அதில் பயணம் செய்த 239 பயணிகளும், பணியாளர்களும் விமானத்துடன் காணாமல் போயிருந்தனர்.
MH370

படம்: AFP