மலேசிய பாடசாலை தீக்கு 25 பேர் பலி

Malaysia

மலேசியாவில் இயங்கும் Darul Quran Ittifaqiyah என்ற இஸ்லாமிய பாடசாலையில் இடம்பெற்ற தீக்கு குறைந்தது 23 மாணவர்களும், இரண்டு ஊழியர்களும் பலியாகி உள்ளதாக கூறப்படுகிறது. இந்த அனர்த்தம் உள்ளூர் நேரப்படி இன்று வியாழன் அதிகாலை 5:40 மணிக்கு இடம்பெற்று உள்ளது.
.
இந்த தீயால் பாதிக்கப்பட்ட மேலும் ஏழு பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அத்துடன் 11 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டும் உள்ளனர்.
.
மாணவர்கள் தங்கி இருந்து கல்வி பயிலும் இந்த பாடசாலை அந்நாட்டு கல்வி அமைச்சுக்கு உட்படாதது. பதிலாக இப்பாடசாலை அந்நாட்டு சமய அமைச்சின் மேற்பார்வைக்கு உட்பட்டது.
.
மலேசியாவின் தீயணைக்கும் படை இந்த தீ மின் ஒழுக்கு காரணமாக இடம்பெற்றது என்றுள்ளது.
.
Tahfiz என்று அழைக்கப்படும் இவ்வகை பாடசாலைகள் சுமார் 5 முதல் 18 வயதான மாணவர்களை கொண்டிருக்கும்.

.