மாலைதீவுள் மீண்டும் அரசியல் குழப்பம்

Maldives

மாலைதீவு அரசியல் மீண்டும் குழப்பத்தில் உள்ளது. குறிப்பாக கடந்த வெள்ளி முதல் குழப்பம் உக்கிரம் அடைந்துள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை மாலத்தீவு உயர் நீதிமன்றம் தற்போது கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ள அனைத்து எதிர்க்கட்சி உறுப்பினர்களையும் விடுதலை செய்யும்படி அரசிடம் கூறி இருந்தது. நீதிமன்ற தீர்ப்பை ஏற்க மறுத்த அரசு உடனடியாக உயர் நீதிமன்ற நீதிபதிகளை கைது செய்து, நாட்டில் 15-நாள் அவசரகால நிலையையும் நடைமுறை செய்துள்ளது.
.
மேற்கு நாடுகள் மாலைதீவு அரசின் செயலை கண்டித்து அறிக்கைகள் வெளியிட்டு இருந்தன. அதேவேளை இந்தியா மட்டுப்படுத்திய கண்டன கருத்துக்களை வெளியிட்டு இருந்தது. ஜனாதிபதி Abdulla Yameen தலைமையிலான மாலைதீவு அரசு முற்றாக சீனா பக்கம் சாயாதிருக்க வைப்பதே இந்தியாவின் முதன்மை நோக்கம்.
.
பிரதம நீதிபதி Abdulla Saeed, மற்றும் நீதிபதி Ali Hameed ஆகியோர் எதிர்க்கட்சி உறுப்பினர்களிடம் இருந்து பல மில்லியன் டாலர்களை இலஞ்சமாக பெற்றே விடுதலை செய்ய தீர்ப்பு கூறி உள்ளனர் என்கிறார் அந்நாட்டு தற்காலிக போலீஸ் அதிபர் Abdulla Nawaz.
.
அதேவேளை சிங்கப்பூர் போன்ற பல நாடுகள் மாலைதீவுக்கான பயண எச்சரிக்கையை விடுத்துள்ளன.
.
சுமார் 1200 தீவுகளை கொண்ட மாலைதீவின் சனத்தொகை சுமார் 428,000 மட்டுமே.

.