மாவோஸ்ட் 23 இந்திய இராணுவத்தை கொலை

மாவோஸ்ட் 23 இந்திய இராணுவத்தை கொலை

இந்தியாவின் சட்டிஸ்கர் (Chhattisgarh) மாநிலத்தில் சுமார் 4 மணித்தியாலங்கள் மாவோஸ்ட் (Maoist)  குழுவுக்கு எதிராக இடம்பெற்ற துப்பாக்கி சண்டைக்கு 23 இந்திய இராணுவத்தினர் பலியாகி உள்ளனர். அத்துடன் 31 இராணுவத்தினர் காயமடைந்தும் உள்ளனர்.

பெருமளவு இந்திய படையினர் சனிக்கிழமை Bijipur மாவட்டத்து அடர்ந்த காட்டு பகுதி ஒன்றுள் தேடுதல் செய்தபொழுதே மேற்படி மோதல் இடம்பெற்றது.

மரணித்த இராணுவத்தின் ஆயுதங்களையும் மாவோயிஸ்ட் எடுத்து சென்றுள்ளனர் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.

1960ம் ஆண்டுகளில் ஆரம்பித்த கம்யூனிஸ்ட் ஆயுத குழு இன்றுவரை இயங்கி வருகிறது. ஆனாலும் கடந்த சில ஆண்டுகளாக அது தனது நடவடிக்கைகளை குறைத்து இருந்தது. இவர்கள் இந்தியாவின் வறுமை மிக்க மாநிலங்களில் பலத்த ஆதரவை கொண்டுள்ளனர்.