மாஸ்கோவில் விமான தீ விபத்துக்கு 41 பேர் பலி

AeroflotCrash

ரஷ்யாவின் தலைநகர் மாஸ்கோவில் (Moscow) இன்று கோளாறுக்கு உள்ளான Sukhoi Superjet 100 வகை விமானம் ஒன்று தரை இறங்கிய உடன் தீ பற்றிக்கொண்டதால் 41 பேர் பலியாகி உள்ளனர்.
.
ரஷ்யாவின் Aeroflot விமான சேவைக்கு சொந்தமான இந்த விமானத்தில் மொத்தம் 73 பயணிகளும் 5 பணியாளர்களும் இருந்துள்ளனர். இந்த விமானம் மாஸ்கோவில் இருந்து Murmansk என்ற நகரை நோக்கி சென்றிருந்தது.
.
வான் ஏறி சில நிமிடங்களில், கோளாறு காரணமாக, இந்த விமானம் மாஸ்கோ விமான நிலையத்துக்கு திரும்பி உள்ளது. திரும்பிய விமானம் ஓடுபாதையில் மோதியதால் தீ பற்றிக்கொண்டது.
.