மீண்டும் Nadal வென்ற French Open

Nadal

ஸ்பெயின் நாட்டவரான, 33 வயதுடைய, நடால் (Rafael Nadal) இன்று மீண்டும் French Open என்ற tennis போட்டியை வென்றுள்ளார். இது அவரது 12 ஆவது French Open வெற்றியாகும். இவர் 2005 ஆம் ஆண்டில், தனது 19 ஆவது வயதில், முதலாவது French Open வெற்றியை இவர் அடைந்திருந்தார். இதுவரையான இவரின் மொத்த வெற்றிகளின் எண்ணிக்கை 18 ஆகும். Roger Federer என்பவரிடம் மொத்தம் 20 வெற்றிகள் உண்டு.
.
இடது கை வல்லமை கொண்ட நடால், 25 வயதுடைய Thiem என்பவரை வென்றே தனது 12 ஆவது French Open வெற்றியை இன்று அடைந்திருந்தார்.
.
நடால் சுமார் $2.6 மில்லியனை தனது வெற்றி பணமாக பெறுவார். அத்துடன் பெருமளவு விளம்பர வருமானத்தையும் அவர் பெற்றுக்கொள்ளவார். இன்றைய வெற்றிக்கு முன்னதாக தனது tennis விளையாட்டு வரலாற்றில் நடால் மொத்தம் சுமார் $107 மில்லியனை வென்று இருந்தார்.
.
இரண்டாவது இடத்தை அடைந்த Thiem என்பருக்கு $1.3 மில்லியன் கிடைக்கும்.
.