முதலை பலியெடுத்த பிரித்தானிய பத்திரிகையாளர்

PaulMcClean

பிரித்தானியாவின் Financial Times என்ற பத்திரிகையின் பத்திரிகையாளராக பணிபுரியும் பிரித்தானியர் ஒருவர் அறுகம் குடா பகுதியில் முதலை ஒன்றால் இழுத்து செல்லப்பட்டதாக கூறப்படுகிறது. Oxford பல்கலைக்கழகத்தில் கல்வி கற்ற, 25 வயதுடைய, Paul McClean என்பவரே இவ்வாறு பலியானதாக கூறப்படுகிறது. இவரின் உடல் இதுவரை காணப்படவில்லை.
.
Paul McClean நண்பர்களுடன் இலங்கைக்கு உல்லாச பயணம் வந்துள்ளனர். சம்பவ தினத்தன்று இவரும் இவரின் நண்பர்களும் கடலில் surfing விளையாட சென்றுள்ளார். அப்போது இவர் நண்பர்களை விட்டு விலகி சிறிது தூரம் சென்றுள்ளார் (மலசலம் கழிக்க என்று கருதப்படுகிறது). பின்னர் இவர் கைகளை கழுவ நீரில் இறங்கியுள்ளார். அப்போதே முதலை இவரை இழுத்து சென்றுள்ளது.
.

அறுகம் குடாவுக்கு தெற்கே உள்ள Crocodile Rock என்ற பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்று உள்ளது. அறுகம் குடாவில் உள்ள Safa Surf School என்ற surfing பயிற்சி நிலைய உரிமையாளர் Fawas Lafeer இந்த சம்பவம் மாலை 3:15 அளவில் இடம்பெற்றதாக கூறியுள்ளார்.
.