முதல் Quantum செய்மதியை ஏவியது சீனா

Micius

Quantum தொழில்நுட்பம் முறையிலான தொலைத்தொடர்பை ஏற்படுத்தக்கூடிய செய்மதி ஒன்றை சீனா செய்வாக்கிழமை அதிகாலை ஏவி உள்ளது. இதுவே இவ்வகை செய்மதிகளில் முதலாவது ஆகும். கனடா, அமெரிக்கா, ஜப்பான், ஐரோப்பிய நாடுகள் ஆகியன இவ்வகை தொழில்நுட்பத்தில் வேகமாக செயல்பட்டாலும், சீனா முந்தியுள்ளது.
.

Quantum தொழில்நுட்பம் subatomic particles களின் குணாதிசயங்களை பயன்படுத்தி செயல்படுவது ஆகும். Quantum physics ஆய்வுகளுக்கு சீனா பல பில்லியன் டொலர்கள் செலவை செய்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. அதேவேளை அமெரிக்கா $200 மில்லியனை மட்டுமே இவ்வகை ஆய்வுகளில் செலவழித்து உள்ளது.
.
Subatomic particles மூலம் செலுத்தப்படும் செய்திகள் மற்றவரால் இடைமறிக்கப்படும்போது குழம்பிவிடும். அதனால் இவ்வகை தொலைத்தொடர்பை எதிரிகள் தற்போது கிடைக்கும் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி ஒட்டுக்கேட்க முடியாது. அதனால் இதை ஒரு hack-proof தொழில்நுட்பம் என்று கூறப்படுகிறது.
.
இந்த செய்மதிக்கு Micius என்று பெயர் இடப்பட்டு உள்ளது. Micius என்பவர் கி.மு. ஐந்தாம் நூற்றாண்டு சீன அறிஞர் ஆவார். சுமார் 600 kg எடையுடைய இந்த செய்மதி 500 km உயரத்தில் பூமியை சுற்றி வரும். ஒரு சுற்றுக்கு சுமார் 90 நிமிடம் தேவைப்படும்.

.

படம்: CCTV