முன்னாள் தென்னாபிரிக்க சனாதிபதி சூமா சரண்

முன்னாள் தென்னாபிரிக்க சனாதிபதி சூமா சரண்

தென்னாபிரிக்காவின் முன்னாள் சனாதிபதி சூமா (Jacob Zuma, வயது 79) இன்று புதன் மாலை சிறை அதிகாரிகளிடம் சரணடைந்து உள்ளார். சரணடைந்த இவர் தனது 15 மாத கால சிறை தண்டனையை ஆரம்பிப்பார்.

இவர் மீது சுமத்தப்பட்ட ஊழல் வழக்குக்கு ஒன்று கடந்த கிழமை இடம்பெற்றது. ஆனால் சூமா அந்த வழக்கு விசாரணைக்கு செல்லவில்லை. அதனால் அவர் நீதிமன்றத்தை உதாசீனம் செய்தார் என்ற குற்றச்சாட்டில் 15 மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டு இருந்தது.

தண்டனைப்படி சூமா ஞாயிறு சிறைச்சாலைக்கு செல்ல தவறியிருந்தார். அதனால் அவர் புதன்கிழமை சாமத்திற்கு முன் சரணடையாவிடில், கைது செய்யப்படுவார் என்று கூறப்பட்டது. இந்நிலையிலேயே இவர் சிறைச்சாலையில் சரண் அடைந்து உள்ளார்.

சுமார் 9 ஆண்டுகள் சனாதிபதியாக பதவி வகித்த இவரை இவரின் ANC கட்சி 2018ம் ஆண்டு விரட்டி இருந்தது.