முன்னாள் மலேசிய பிரதமர் வெளிநாடு செல்ல தடை

1MDB

இந்த கிழமையின் ஆரம்பத்தில் இடம்பெற்ற மலேசிய பொது தேர்தலில் தோல்வி அடைந்த, 64 வயதுடைய, முன்னாள் பிரதமர் Najib Razak மலேசியாவை விட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
.
உள்ளூர் நேரப்படி இன்று சனி காலை 10:00 மணியளவில் முன்னாள் பிரதமரும், Rosmah Mansor என்ற அவரின் மனைவியும் விசேட விமானம் ஒன்றின் மூலம் மலேசியாவின் தலைநகர் கோலாலம்பூரில் இருந்து இந்தோனேசியாவின் Jakarta நகருக்கு செலவிருந்தனர். அப்போதே முன்னாள் பிரதமர் வெளிநாடு செல்வது இடைநிறுத்தப்படுள்ளது.
.
இவர்களை ஏற்றி செல்லவிருந்த, இந்தோனேசிய விமான சேவை ஒன்றுக்கு சொந்தமான தனியார் விமானம் போதும் மலேசியாவில் உள்ளதாக கூறப்படுகிறது.
.
முன்னாள் பிரதமர் மலேசிய அரசின் 1MDB (1Malasiya Development Berhad) என்ற முதலீட்டில் இருந்து $700 மில்லியன் பணத்தை களவாடினார் என்ற குற்றச்சாடு தொடர்பான வழக்கு தற்போது தொடர்கிறது.
.