முன்னாள் FBI Deputy Director McCabeயும் பதவி நீக்கம்

McCabe

அமெரிக்காவின் ஜனாதிபதி ரம்பின் அரசு இன்று மேலும் ஒரு உயர் அதிகாரியின் பதவியை பறித்துள்ளது. முன்னாள் FBI Deputy Director Andrew McCabe வெள்ளிக்கிழமை பதவியில் இருந்து நீக்கப்பட்டு உள்ளார். இவர் மீது ரம்புக்கு நீண்ட காலமாகவே வெறுப்பு இருந்து வந்துள்ளது. McCabeயின் பதவி பறிப்பு ஒரு பழிவாங்கல் செயலாகவே கருதப்படுகிறது.
.
தனக்கு எதிரான FBI விசாரணைகளின் தரவுகளை McCabe பத்திரிகைகளுக்கு கசிய விட்டுருந்தார் என்று ரம்ப் கருதி வந்துள்ளார். அத்துடன் McCabeயின் மனைவியார் தேர்தல் ஒன்றில் போட்டியிட்டபோது ஹிலாரி கிளின்டனின் ஆதரவாளர் ஒருவர் $700,000 நன்கொடையை வழங்கி இருந்தார் என்றும் ரம்ப் கூறியிருந்தார். அதனால் MaCabe ஹிலாரி கிளின்டனை முறையாக விசாரணை செய்யவில்லை என்று ரம்ப் கோபம் கொண்டிருந்தார்.
.
சுமார் 20 வருடங்களுக்கு முன் Federal Bureau of Investigation (FBI) அமைப்பில் இணைந்த MaCabe நாளை ஞாயிறு வரை பதவியில் இருந்திருந்தால், முமையான ஓய்வூதியம் பெற்று இருப்பார். அவர் அவ்வாறு ஓய்வூதியம் பெறக்கூடாது என்பதற்காகவே ரம்ப் வெள்ளிக்கிழமை, இரண்டு தினங்களுக்கு முன், MaCabeயை பதவியில் இருந்து நீக்கி உள்ளார்.
.
அண்மையில் FBI Director James Comeyயும் பதவி நீக்கம் செய்யப்பட்டு இருந்தார். அப்போது உதவி deputy director ஆக இருந்த McCabe தற்காலிக director ஆகவும் கடமை ஆற்றி இருந்தார். பின்னர்  ரம்ப் McCabeயை ஒரு சாதாரண ஊழியர் ஆக பதிவி இறக்கம் செய்து இருந்தார். அந்நிலையிலேயே McCabeயின் பதவி பறிக்கப்பட்டு உள்ளது.
.

சுமார் 90 நாட்களின் முன்னரேயே ரம்ப் McCabeயின் ஓய்வு ஊதியத்தில் ஒரு கண் வைத்திருந்தமை அவரின் Tweet ஒன்றில் கூறப்பட்டு இருந்தது.
.

McCabe