மும்பாயில் சுரங்கம் தோண்டி வங்கி கொள்ளை

BankOfBaroda

கடந்த சனிக்கிழமை மும்பாயில் உள்ள Bank of Baroda வங்கி கிளை ஒன்றில் சுமார் 100 அடி நீள சுரங்கம் அமைத்து கொள்ளையடிக்கப்படுள்ளது. கடந்த சனிக்கிழமை இரவு நடாத்தப்பட்ட இந்த கொள்ளை விபரம் திங்கள் காலையே வங்கிக்கு தெரிய வந்துள்ளது.
.
வங்கிக்கு அருகில் உள்ள பலசரக்கு கடை ஒன்றை வாடகைக்கு எடுத்த திருடர், கடந்த நாலு மாதங்களாக சுரங்கம் அமைக்கும் பணியிலும் ஈடுபட்டு உள்ளனர். கடையின் முகப்பு Shree Balaji General Store என்று விளம்பர பலகையை கொண்டுள்ளது.
.
BankOfBaroda2
.
வங்கி அதிகாரி ஒருவர் BBC சேவைக்கு வழங்கிய கூற்றில், அந்த கிளையில் 225 வைப்பு பெட்டகங்கள் (safety boxes) இருந்ததாகவும் அதில் 30 பெட்டகங்கள் உடைக்கப்பட்டு உள்ளடக்கங்கள் திருடப்பட்டு உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. பொதுவாக இவ்வகை வங்கி வைப்பு பெட்டகங்களுக்குள் உள்ள பொருட்களுக்கு வங்கி பொறுப்பல்ல. வாடிக்கையாளர் அந்த பெட்டகங்களுள் என்ன வைத்துருக்கிறார்கள் என்பது வங்கிக்கு தெரிந்திருப்பதுவும் இல்லை. வங்கி பெட்டகத்துக்கான வாடகையை மட்டுமே பெற்றுக்கொள்ளும்.
.
உடைக்கப்பட்ட பெட்டகங்களுள் ஒன்றுக்கு உரிமையாளரான Dagdu Gavani தனது வாழ்நாள் சேமிப்புகள் எல்லாம் களவாடப்பட்டு உள்ளதாக கூறியுள்ளார்.

.