மும்பாயில் மாடிகள் உடைவு, 100 பேர் இடிபாடுள்

மும்பாயில் மாடிகள் உடைவு, 100 பேர் இடிபாடுள்

மும்பாயில் இருந்து சுமார் 200 km தெற்கே உள்ள Mahad என்ற நகரில் குறைந்தது 47 மாடி வீடுகள் உடைந்து வீழ்ந்துள்ளன. இந்த இடிபாடுகள் உள்ளே சுமார் 100 அகப்பட்டும் உள்ளனர். குறைந்தது 28 பேர் ஏற்கனவே மீட்கப்பட்டு உள்ளனர். இதுவரை ஒருவர் பலியானது அறியப்படும் உள்ளது.

ஐந்து மாடி அடுக்குகளை கொண்ட இந்த வீட்டு தொகுதியிலேயே மேற்படி 47 வீடுகளும் இருந்துள்ளன. உள்ளூர் நேரப்படி இன்று திங்கள் மாலை 6:50 மணியளவில் இந்த சம்பவம் நிகழ்துள்ளது.

மாடி உடைந்ததற்கான காரணம் இதுவரை அறியப்படவில்லை. தற்போது அங்கு மன்சூன் மழை காலம். இக்காலத்தில் தரமற்ற வீடுகள் இலகுவில் பாதிப்படைவது உண்டு.

சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்படும் வீடுகள் இந்தியாவில் உடைந்து வீழ்வது உண்டு. 2017 ஆம் ஆண்டில் மட்டும் சுமார் 1,161 கட்டிடங்கள் உடைந்து வீழ்ந்துள்ளன.