முற்றிவரும் கனடா, சவுதி முறுகல்

Saudi

கனடிய அரசும், சவுதி அரசும் கடந்த சில நாட்களாக கருத்து போரில் ஈடுபட்டுள்ளன. அந்த போர் நாளாந்தம் முற்றி வருகிறது.
.
அண்மையில் சவுதி அரசு Samar Badawi என்ற உரிமைகளுக்காக போராடும் பெண்ணை சிறையில் அடைத்திருந்தது. அதை கனடா கண்டித்திருந்தது. அதனாலேயே சவுதி கோபம் கொண்டுள்ளது. சவுதியின் உள்நாட்டு விடயங்களுள் கனடாவே அல்லது வேறு ஒரு நாடோ தலையிடுவதை எதிர்க்கிறது சவுதி.
.
Samar Badawi என்பவர் Raif Badawi என்பவரின் சகோதரி ஆவார். சவுதி அரசை விமர்சித்து எழுதிய காரணத்தால் Raif 2012 ஆம் ஆண்டுமுதல் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். Raif யின் மனைவியும், அவர்களின் 3 பிள்ளைகளும் கனடாவின் Quebec மாகாணத்தில் 2015 ஆம் ஆண்டு முதல் வசிக்கின்றனர்.
.
சவுதியின் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் Adel al-Jubir புதன்கிழமை தனது கூற்று ஒன்றில் கனடா மன்னிப்பு கூறவேண்டும் என்றுள்ளார். ஆனால் கனடிய பிரதமர் ரூடோ தாம் தமது கருத்தில் உறுதியாக உள்ளதாக கூறியுள்ளார்.
.
சவுதி கனடாவில் முதிலீடு செய்வதை நிறுத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. அத்துடன் கனடாவில் இருந்து பெறவிருந்த $15 பில்லியன் பெறுமதியான Light-Armoured Vehicles (LAVs) கொள்வனவையும் சவுதி இரத்து செய்யலாம் என்றும் கூறப்படுகிறது.
.
சவுதியின் தேசிய விமான சேவையான Saudi Arabian அடுத்த கிழமை முதல் கனடாவுக்கான சேவைகளை நிறுத்துகிறது.
.
கனடாவில் கல்வி கற்கும் சவுதி மாணவர்களும் திருப்பி அழைக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.
.
சவுதிக்கான கனடிய தூதுவர் ஏற்கனவே சவுதியை விட்டு வெளியேறுமாறு கேட்கப்பட்டுள்ளார்.
.