முஷ்ராபை கைது செய்ய நீதிமன்றம் கட்டளை

Musharraf

முன்னாள் பாகிஸ்தான் ஜனாதிபதி முஷ்ராபை (Pervez Musharraf) கைது செய்யும்படி பாகிஸ்தான் நீதிமன்றம் இன்று வியாழன் கட்டளை விடுத்துள்ளது. ஆனால் கடந்த வருடம் முதல் முஷ்ராப் டுபாயில் வசிக்கிறார். முஷ்ராபின் சொத்துக்களையும் முடக்கவும் நீதிமன்றம் கட்டளை விடுத்துள்ளது.
.
2007 ஆம் ஆண்டு இடம்பெற்ற பெனாசிர் பூட்டோ (Benazir Bhutto) படுகொலை வழக்கில் முஷ்ராப் குற்றம் சாட்டப்பட்டு உள்ளார். அதை முஷ்ராப் மறுத்துள்ளார்.
.
பாகிஸ்தானில் ஒரு முன்னாள் இராணுவ உயர் அதிகாரியை கைது செய்ய கட்டளை இடப்பட்டது இதுவே முதல் முறை.
.

முஷ்ராப் 1999 ஆண்டில் இராணுவ கவிழ்ப்பு மூலம் பதவியை கைப்பற்றி இருந்தவர்.
.