மோடியை அழைத்துள்ளது அமெரிக்கா

India-US

இந்திய பிரதமர் நரேந்திர மோடியை அமெரிக்கா வருமாறு ஜனாதிபதி ஒபாமா கடிதம் அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தை ஏற்றுக்கொண்ட மோடி வரும் September மாதத்தில் அமெரிக்கா செல்லலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒபாமாவின் கடிதத்தை அமெரிக்காவின் உதவி பாதுகாப்பு செயலாளர் Williams Burns டில்கியில் இன்று வெள்ளிக்கிழமை அளித்துள்ளார்.
.
2002 ஆம் ஆண்டில் குஜாராத்தின் முதலமைச்சராக இருந்த மோடி அப்போது அங்கு நடைபெற்ற முஸ்லீம்களுக்கு எதிரான வன்முறைகளை தடுக்கவில்லை என்று கூறிய அமெரிக்கா, மோடிக்கு அமெரிக்க செல்ல விசா வழங்குவதை தடை செய்திருந்தது.
.
ஆனால் இன்று பிரதமராகிவிட்ட மோடியை வேறு வழியின்றி அழைக்கிறது அமெரிக்கா. வேகமாக வளர்ந்துவரும் சீனாவின் முன்னிலையில் இந்தியாவின் உறவு அமெரிக்காவுக்கு தவிர்க்க முடியாத ஒன்று. இந்தியாவுக்கு தேவை அமெரிக்காவின் முதலீடுகள். அமெரிக்காவுக்கு தேவை இந்தியாவுடனான பாதுகாப்பு உறவுகள். முற்காலத்தில் ஏற்பட்ட Indo-Soviet Treaty போல் புதியதோர் Indo-America Treaty ஏற்பட்டாலும் அதிசயப்பட ஒன்றுமில்லை.
.

அடுத்துவரும் மாதங்களில் அமரிக்காவின் பாதுகாப்பு செயலாளர் Chuck Hagel, வெளியுறவு செயலாளர் John Kerry ஆகியோரும் இந்தியா செல்லவுள்ளனர்.