யாழ்-சென்னை, யாழ்-திருச்சி விமான சேவைகள்

AllianceAir

யாழ்ப்பாண விமான நிலையமான பலாலிக்கும் இந்தியாவின் சென்னை மற்றும் திருச்சி ஆகிய இரண்டு நகர்களுக்கும் இடையில் நேரடி விமான சேவை ஆரம்பமாகவுள்ளன. Alliance Air என்ற விமான சேவையே இந்த நேரடி சேவையை வழங்கவுள்ளது.
.
1996 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட Alliance Air சேவை இந்தியாவின் Air India என்ற அரச விமான சேவையின் அங்கம். டெல்லியை தளமாக கொண்ட இந்த சேவையிடம் தற்போது சுமார் 50 பயணிகளை காவக்கூடிய இரண்டு ATR-42 turboprop விமானங்களும், சுமார் 75 பயணிகளை காவக்கூடிய 18 ATR-72 turboprop விமானங்களும் உள்ளன.
.
வெள்ளோட்ட சேவை வரும் அக்டோபர் 17 ஆம் திகதி இடம்பெறவுள்ளது. ஆரம்பத்தில் கிழமைக்கு 3 சேவைகள் இடம்பெறும் என்று கூறப்படுகிறது.
.
பலாலி விமான நிலையம் Jaffna International Airport என்று பெயரிடப்பட்டு உள்ளது. தற்போது பலாலி விமான ஓடுபாதை 2.3 km நீளமாகவுள்ளது. அடுத்த கட்ட அபிவிருத்தியில் இதன் நீளம் மேலும் 1 km ஆல் நீட்டப்படும்.
.
முதலில் டெல்லிக்கும், மும்பாய்க்கும் மட்டும் பலாலியில் இருந்து சேவை வழங்க திட்டம் இருந்தாலும், எதிர்ப்புகள் காரணமாக சென்னையும், திருச்சியும் முதலில் சேவையை பெறுகின்றன.
.
யாழ்-கொழும்பு விமான சேவையில் தற்போதைக்கு மாற்றம் எதுவும் இல்லை என்றும் கூறப்படுகிறது. இதனால் வெளிநாடுகளில் இருந்து வடக்கே செல்லும் சில தமிழ் பயணிகளை Sri Lankan விமான சேவை இழக்கக்கூடும்.
.