யுத்த விமானம் Joint Strike Fighter F-35

F-35

F-35 அல்லது Joint Strike Fighter என்று அழைக்கப்படும் யுத்த விமானம் அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, அவுஸ்திரேலியா போன்ற பல மேற்கு நாட்டு படைகளுக்கு பலம் ஊட்டப்போகும் அடுத்த சந்ததி யுத்த விமானம். தரைப்படைக்கு ஒருவகை யுத்தவிமானம், வான் படைக்கு இன்னொரு வகை விமானம், கடல் படைக்கு (aircraft carrier) பிறிதொரு விமானம் என்றெல்லாம் இல்லது எதிர்வரும் காலத்தில் முப்படைகளும் இந்த F-35 என்ற ஒருவகை விமானத்தை, சில சிறிய மாற்றங்களுடன், மட்டுமே கொண்டிருக்கும்.

தொழில்நுட்ப்பத்தில் மிகையான இந்த நவயுக யுத்த விமானம் சுமார் 7.5 மில்லியன் software line களை கொண்டுள்ளது. இது தற்போது சேவையில் இருக்கும் நவீன யுத்த விமானங்களில் உள்ளதை விட 3 மடங்கு அதிகம். இதன் விமானி அணியும் தலை கவசம் மட்டும் சுமார் $500,000 (அரை மில்லியன்) பெறுமதியானது. இதன் முன்கண்ணாடி பகுதி விமானிக்கு தேவையான அனைத்து தகவல்களையும் வழங்கவல்லது. இந்த F-35 ரஷ்யாவால் தற்போது தயாரிக்கப்படும் T-50 (Sukhoi PAK FA ) மற்றும் சீனாவின் புதிய தயாரிப்பான J-20 போன்றவற்றுக்கு முகம் கொடுக்கக்கூடிய வகையில் இருக்கும்.இந்த விமானத்தை மேற்கு நாடுகளுக்கு மட்டுமென தாரிப்பது Lockheed Martin Corp. என்ற அமெரிக்க நிறுவனம். அத்துடன் Northrop Grumman மற்றும் BAE System போன்ற நிறுவனங்களுக்கும் F-35 தயாரிப்பில் பங்குண்டு.

ஆனால் F-35 தாரிப்பு பலத்த சவால்களை சந்தித்துக்கொண்டிருக்கிறது. முதலில் இதன் தயாரிப்பு செலவுகள் $300 பில்லியனை தாண்டியுள்ளது. இது முதல் வரவுசெலவில் சொல்லப்பட்ட தொகையை விட சுமார் 163 பில்லியன் அதிகம். அதனால் F-35 ஒன்றின் விலை $160 மில்லியன்  (தரைப்படைக்கு உரியது) முதல் $200 மில்லியன் (விசேட தயாரிப்பு) வரை இருக்கும். முதல் 5 வருட பராமரிப்புகளையும் கணிப்பின், ஒரு F-35 செலவு சுமார் $253 மில்லியன் ஆக இருக்கும். அமெரிக்கா சுமார் 2400 F​-35 களை அடுத்துவரும் சில வருடங்களில் கொள்வனவு செய்யும். இங்கிலாந்து தற்போது கட்டப்பட்டு வரும் aircraft carrier ஆனா HMS Queen Elizabeth இல் மொத்தம் 14 F-35 விமானங்களை கொண்டிருக்கும். அதற்கு அவர்கள் சுமார் 2.5 பில்லியன் poundகளை செலவழிப்பர்.

அத்துடன் F-35 தயாரிப்புகள் சுமார் 7 வருடங்களால் தாமதமாகி உள்ளது. அமெரிக்கா இவற்றை 2010 இல் சேவையில் ஈடுபடுத்த விரும்பியிருந்தது. ஆனால் தாமதங்கள் காரணமாக இவற்றுள் சில 2015 இல் வரவுள்ளன. 2012 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்த விரும்பிய இங்கிலாந்து 2018 அளவிலேயே அறிமுகப்படுத்தும்.

கடந்த காலங்களில் அமெரிக்கா ஏற்கனவே முற்றாக தயாரிக்கப்பட்ட யுத்த விமானங்களையே கொள்வனவு செய்திருந்தது. அனால் F-35 களை வடிவமைப்பு காலங்களிலேயே கொள்வனவு செய்ய முடிவு செய்துள்ளது. அதனால் புலி வாலை பிடித்த நாயனார் போல் ஆனார். இனிமேல் தான் அமெரிக்க படைகள் F-35 களை பரீட்சித்து பார்க்கப்போகிறது. அவர்கள் சுமார் 56,000 சோதனைகளை (test) செய்தல் அவசியம்.

Image: Lockheed Martin Corp