ரம்பின் ஈரான் ஆயுத தடை நீடிப்புக்கு ஐ.நா. மறுப்பு

ரம்பின் ஈரான் ஆயுத தடை நீடிப்புக்கு ஐ.நா. மறுப்பு

அமெரிக்காவின் விருப்பத்துக்கு ஏற்ப ஈரான் மீதான Resolution 2231 ஆயுத தடையை நீடிக்க ஐ.நா. பாதுகாப்பு சபை மறுத்துவிட்டது. இந்த செய்தியை அமெரிக்க வெளியுறவு செயலாளர் Mike Pompeo இன்று வெள்ளி மாலை தெரிவித்து உள்ளார்.

மொத்தம் 15 நாடுகளை கொண்ட சபையில் பிரித்தானியா, பிரான்ஸ், ஜெர்மனி உட்பட மொத்தம் 11 அங்கத்துவ நாடுகள் வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை. அதனால் வெற்றிக்கு தேவையான 9 வாக்குகள் பெறப்படவில்லை. அமெரிக்காவும், Dominican Republican னும் மட்டுமே அமெரிக்காவுக்கு ஆதரவாக வாக்களித்தன.

2015 ஆம் ஆண்டு அமெரிக்கா, ரஷ்யா, சீனா, பிரான்ஸ், பிரித்தானியா ஜெர்மனி ஆகிய நாடுகள் ஐ.நா. மூலம் ஈரானுடன்  செய்து கொண்ட JCPOA (Joint Comprehensive Plan of Action)  ஒப்பந்தப்படி ஈரான் மீதான UNSC Resolution 2231 வரும் அக்டோபர் மாதம் 18 ஆம் திகதி நீக்கப்படல் வேண்டும். ஐ.நாவின் Resolution 2231 ஈரானுக்கு ஆயுதங்களை விற்பனை செய்வதை தடை செய்திருந்தது.

ஆனால் ஒபாமா மீது காழ்ப்பு கொண்ட ரம்ப் 2018 ஆம் ஆண்டு ஒபாமா அரசு செய்துகொண்ட JCPOA உடன்படிக்கையில் இருந்து வெளியேறி, தன்னிசையான தடைகளை ஈரான் மீது அமெரிக்கா விதித்தது. ஏனைய நாடுகள் தொடர்ந்தும் JCPOA உடன்படிக்கையை முடிந்த அளவு பின்பற்றி வந்தன.

தற்போது ஈரான் மீதான ஆயுத தடை நீக்கப்படுவதை தடுக்க ரம்ப் அரசு புதிய தீர்மானம் ஒன்றை ஐ.நா. பாதுகாப்பு சபைக்கு விட்டிருந்தது. ஈரான் மீது காலவரை அற்ற தடை வேண்டும் என்கிறது ரம்ப்  அரசு. முதலில் 35 பந்திகளை கொண்டிருந்த 7 பக்க தீர்மானத்தை பலத்த எதிர்ப்புக்கள் காரணமாக ரம்ப் அரசு 4 பந்திகள் கொண்ட தீர்மானம் ஆக்கியது. அந்த தீர்மானமே தோல்வி கண்டது.

இந்த தீர்மானம் மீதான வாக்கெடுப்பு நேற்று வியாழன் மாலை முதல் இன்று வெள்ளி மாலை வரையான 24 மணி காலத்தில் இடம்பெற்றது. கரோனா காரணமாக வாக்கெடுப்பு இணையம் மூலமே இடம்பெற்றது.

அமெரிக்காவின் இந்த தீர்மானம் வெற்றி பெற 15 வாக்குகளை கொண்ட சபையில் குறைந்தது 9 வாக்குகளை பெறவேண்டும். அத்துடன் எந்தவொரு veto நாடும் எதிர்க்காமல் இருத்தல் வேண்டும். சீனா, ரஷ்யா ஆகிய இரு veto நாடுகளும் அமெரிக்காவின் தீர்மானத்துடன் இணங்கவில்லை. அவை தேவைப்பட்டால் தாம் veto மூலம் தீர்மானத்தை முறியடிக்க உள்ளதாகவும் கூறி இருந்தன.

இந்த தீர்மானம் நிறைவேறாத நிலையில் தாம் JCPOA உடன்படிக்கையின் கீழ் அமையும் ‘snap back’ விதியை பயன்படுத்தி ஈரான் மீதான தடையை நீடிக்க முனைவோம் ரம்ப் அரசு. அந்த உடன்படிக்கையில் இருந்து 2018 ஆம் ஆண்டு வெளியேறிய ரம்ப் அரசு JCPOA விதிகளையும் பயன்படுத்த முடியாது என்கின்றன ஏனைய நாடுகள்.

​​YES/ஆதரவு: US, Dominican Republic
NO/எதிர்ப்பு: Russia, China
ABSTENTIONS: France, Germany, UK, Belgium, Estonia, Indonesia, South Africa, Niger, Tunisia, Vietnam, Saint Vincent and the Grenadines