ரம்பின் குட்டுக்கு கிடைத்தது கனடா மட்டுமே

Bombardier

மெக்ஸிக்கோவை (Mexico) தண்டிப்பேன், சீனாவை தண்டிப்பேன் என்றெல்லாம் மார்தட்டி வெள்ளைமாளிகைக்கு வந்திருந்த ஜனாதிபதி ரம்பின் குட்டுக்கு இறுதியில் கிடைத்தது கனடா மட்டுமே. கனடாவின் Bombardier தயாரிக்கும் CS100 என்ற நடுத்தர அளவிலான பயணிகள் விமானத்துக்கு அமெரிக்கா 80% வரி அறவிடவுள்ளது.
.
அமெரிக்காவின் விமான சேவையான Delta Airlines கனடாவின்  Bombardier தயாரித்த, சுமார் 100 பேர் பயணிக்கக்கூடிய, CS100 வகை விமானங்கள் எழுபத்தைந்தை (75) கொள்வனவு செய்யவிருந்தது. NAFTA (North American Free Trade Agreement) உடன்படிக்கையின்படி அமெரிக்கா கனடாவில் தயாரிக்கப்பட்ட விமானங்களுக்கு வரி அறவிட முடியாது.
.
ஆனால் Bombardier கனடிய அரசின் சட்ட விரோத மானியங்களை பெற்று இந்த விமானத்தை தயாரித்து உள்ளது என்று கூறியே இந்த விசேட வரியை அறவிட ரம்ப் அரசு தீர்மானித்து உள்ளது. இந்த விமான விற்பனை, வரி எதுவும் இன்றி, 2016 ஆம் ஆண்டில் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருந்தது.
.
உண்மையில் ரம்ப் அரசு கனடாவின் விமானங்களுக்கு பதிலாக அமெரிக்காவின் Boeing தயாரிக்கும் விமானங்களை அமெரிக்காவின் விமான சேவைகள் கொள்வனவு செய்வதை மட்டுமே விரும்புகிறது.
.
Bombardier ஒரு கனடிய நிறுவனம் என்றாலும், அது அமெரிக்காவில் உள்ள கிளைகளில் சுமார் 7,000 ஊழியர்களை கொண்டுள்ளது.
.
Bombardier மீதான குற்றச்சாட்டுக்களை International Trade Commission (ITC) தற்போது விசாரணை செய்து வருகிறது.
.
அத்துடன் ரம்ப் அரசு கனடாவிலிருந்தும், Mexicoவிலிருந்தும் இறக்குமதி செய்யப்படும் வாகனங்கள் குறைந்தது 50% அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட பாகங்களை கொண்டிருக்க வேண்டும் என்றும் NAFTAவை மாற்றி அமைக்கவும் முனைகிறது.
.
கனடா அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யும் வீடுகள் கட்ட பயன்படும் softwood விவகாரத்திலும் இழுபறி தோன்றியுள்ளது.

.