ரம்பின் தடைக்கு எதிராக ஐரோப்பா சட்டம்

EU

ஒபாமா காலத்தில் ஈரானுடன் செய்து கொண்ட அணு ஆயுத தவிர்ப்பு உடன்படிக்கையில் இருந்து விலகிய ரம்ப், பதிலுக்கு ஈரான் மீது மீண்டும் தடைகளை விதித்தார். அத்துடன் ஈரானுடன் இணைந்து செயல்படும் மற்றைய நாடுகளின் நிறுவனங்களையும் தண்டிக்கவுள்ளதாக கூறி இருந்தார். அதன்படி ஈரானில் முதலிடும் ஐரோப்பிய நிறுவனங்களையும் அமெரிக்கா தண்டிக்கும்.
.
அமெரிக்காவின் மேற்படி தண்டனைகளில் இருந்து ஐரோப்பிய நிறுவனங்களை பாதுகாக்க ஐரோப்பிய ஒன்றியம் blocking statute என்ற சட்டத்தை நடைமுறை செய்யவுள்ளது. இந்த சட்டப்படி ஐரோப்பிய நிறுவங்கள் அமெரிக்காவின் தடை சட்டங்களுக்கு இணைந்து செயப்பட முடியாது. அத்துடன் அமெரிக்கா போன்ற அந்நிய நாட்டு நீதிமன்ற தீர்ப்புகளை ஐரோப்பிய நிறுவனங்கள் மீது நடைமுறை செய்ய முடியாது.
.
இந்த blocking statute வெள்ளிக்கிழமை (18 ஆம் திகதி) காலை 10:30 முதல் நடைமுறைக்கு வரும் என்றுள்ளார் ஐரோப்பிய ஒன்றிய தலைவர் Jean-Claude Juncker. அத்துடன் ஈரானில் வணிகம் செய்யும் ஐரோப்பிய நிறுவங்களுக்கு European Investment Bank உதவி செய்யும் என்றும் கூறியுள்ளார்.
.
முற்காலத்தில் கியூபா மீது தடை விதித்த அமெரிக்கா, அங்கு முதலீடு செய்யும் ஐரோப்பிய நிறுவனங்களை தண்டிக்க முனைந்தபோது, 1996 ஆம் ஆண்டில் ஐரோப்பா இவ்வகை blocking சட்டத்தை முதலில் செயல்படுத்தி இருந்தது. அதனால் அமெரிக்கா அப்போது கியூபாவில் இயங்கிய ஐரோப்பிய நிறுவனங்களை தண்டிக்கவில்லை.
.

இந்த சட்டத்தை மீண்டும் நடைமுறை செய்ய 28 அங்கத்துவ நாடுகளும் ஆதரவு வழங்க வேண்டும்.
.