ரம்பையும் தொற்றியது கரோனா

ரம்பையும் தொற்றியது கரோனா

அமெரிக்க சனாதிபதி ரம்பையும், அவரின் மனைவியையும் கரோனா தொற்றி உள்ளது என்று இன்று வெள்ளி ரம்பால் அறிவிக்கப்பட்டு உள்ளது. இருவரும் உடனடியாக முடக்கப்பட்டு (quarantine) உள்ளனர்.

வியாழக்கிழமை பொது இடங்களில் இருந்த ரம்ப் கரோனா நோய்க்கான அறிகுறி எதையும் கொண்டிருக்கவில்லை. ரம்பின் உதவியாளர் ஒருவர் கரோனா தொற்றி இருந்தமை வியாழன் அறியப்பட்டு இருந்தது.

செவாய்க்கிழமை இடம்பெற்ற சனாதிபதி தேர்தல் வாதத்தின்போது எதிராளியான பைடென் (Biden) எப்போதும் கரோனா கவசம் அணிவதை நையாண்டி செய்திருந்தார். ரம்ப்  பொதுவாக கவசம் அணிவது இல்லை. அத்துடன் அவர் கவசம் அணிவதற்கு எதிராக கருத்துக்களை வெளியிட்டும் உள்ளார்.