ரம்ப்-கிம் சிங்கப்பூர் சந்திப்பு இடைநிறுத்தம்

Trump

இன்று வியாழன் அமெரிக்க ஜனாதிபதி ரம்ப் ஜூன் மாதம் சிங்கப்பூரில் இடம்பெறவிருந்த சந்திப்பில் இருந்து பின்வாங்கியதால் அந்த சந்திப்பு இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.
.
அண்மையில் அமெரிக்காவின் பாதுகாப்பு ஆலோசகர் Bolton, அமெரிக்க உதவி ஜனாதிபதி Mike Pence ஆகியோர் வடகொரியா தொடர்பாக கூறிய கருத்துக்களுக்கு பதிலாக வடகொரியா காரமான கருத்துக்களை தெரிவித்து இருந்தது. அதன் பின்னரே ரம்ப்-கிம் சந்திப்பு இரத்து செய்யப்பட்டுள்ளது.
.
Pence அண்மையில் தனது கூற்று ஒன்றில் வடகொரியாவின் கிம் அமெரிக்காவின் வேண்டுகோள்களுக்கு இணங்காவிடின், லிபியாவில் இடம்பெற்றதுதான் வடகொரியாவிலும் இடம்பெறும் என்று கூறி இருந்தார். அதாவது கடாபி ஆட்சியில் இருந்து விரட்டப்பட்டு, படுகொலை செய்யப்பட்டது போல் கிம்முக்கும் நிகழும் என்றிருந்தார். அதற்கு பதிலாக வடகொரியா Pence ஒரு “ignorant and stupid” என்று கூறியிருந்தது.
.
ஜூன் 12 சந்திப்பு இடைநிறுத்தம் செய்யப்பட்டாலும், ரம்ப் தான் எதிர் காலத்தில் கிம்முடன் சந்திக்க ஆவலாக உள்ளதாகவும் கூறியுள்ளார்.
.

அத்துடன் தேவைப்பட்டால் செயல்பட அமெரிக்க இராணுவம் தயாராக உள்ளதாகவும் ரம்ப் கூறியுள்ளார்.
.