ரம்ப்-தலபான் இரகசிய பேச்சுவார்த்தை முறிந்தது

Trump

நாளை ஞாயிறு அமெரிக்காவில் இடம்பெறவிருந்த ரம்ப்-தலபான் சந்திப்பை இன்று முறித்துக்கொண்டார் அமெரிக்க ஜனாதிபதி ரம்ப்.
.
அமெரிக்க ஜனாதிபதி ரம்ப் ஆப்கானிஸ்தானின் தலபான் இயக்கத்துடன் சில காலமாக இரகசிய பேச்சுவார்த்தை நடாத்தி வருகிறார். அங்கு அமெரிக்க படைகள் நடாத்திவரும் 18 வருடகால யுத்தத்தை ஒரு முடிவுக்கு கொண்டுவருவதே ரம்பின் நோக்கம்.
.
ஆனால் ரம்புடன் பேச்சுவார்த்தை நிகழ்த்திவரும் தலபான் தனது தாக்குதல்களையும் தொடர்ந்து வந்துள்ளது. கடந்த வியாழக்கிழமை ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் இடம்பெற்ற தாக்குதல் ஒன்றுக்கு ஒரு அமெரிக்க படையினர் உட்பட 12 பேர் பலியாகி இருந்தனர். அந்த தாக்குதலை தாமே செய்ததாக தலபான் அறிவித்த உடனேயே ரம்ப் பேச்சுக்களை இடைநிறுத்தி உள்ளார்.
.
2001 ஆம் ஆண்டு அல்-கைடா நிகழ்த்திய 9/11 தாக்குதலுக்கு பின் ஆப்கானிஸ்தானில் நிலைகொண்டுள்ள அமெரிக்கா தலைமையிலான மேற்கு படைகள் சுமார் 3,500 உறுப்பினரை இழந்துள்ளன. அதில் 2,300 அமெரிக்க படையினரும் அடங்குவர். அதே காலத்தில் சுமார் 32,000 பொதுமக்கள் பலியாகி உள்ளதாக ஐ.நா. கூறியுள்ளது.
.
இதுவரை குறைந்தது 9 தடவைகள் அமெரிக்காவும், தலபானும் கட்டாரில் இரகசிய பேச்சுக்களை நடாத்தி உள்ளனர்.
.