ரம்ப் வருகைக்கு தயாராகிறது இந்தியா

India-US

அமெரிக்க சனாதிபதி ரம்பின் அடுத்த கிழமை வருகைக்கு பல முனைகளில் தயாராகிறது இந்தியா. ரம்ப் வரும் திங்கள் கிழமை இந்தியா செல்வார். குஜராத் நகரான அகமடாபாத் (Ahmeddabad) சென்று அங்கு உலகிலேயே பெரிய கிரிக்கெட் மைதானத்தை திறப்பார் ரம்ப்.
.
ரம்ப் தாஜ்மகாலுக்கும் செல்லவுள்ளார். ரம்பை அங்குள்ள குரங்குகளிடம் இருந்து பாதுகாக்க போலீசார் catapult உடன் தயாராக உள்ளனர்.
.
அசுத்த மணமுடைய கழிவுகளால் நிரம்பிய ஆறுகளுக்கு மில்லியன் கலன் கணக்கிலான தூய்மையான நீர் பாச்சி மெருகூட்டப்படுகிறது. Ganganahar நீர் யமுனா ஆற்றை சுத்தமாக்க பயன்படுத்தப்பட்டு உள்ளது. இந்த நீர் தாஜ்மகால் பகுதியை 21 ஆம் திகதி அடையும்.
.
அழுக்கான குடியிருப்புக்களை (slum) மறைத்து 1,300 அடி நீள சுவர்களும் கட்டப்படுகின்றன. அத்துடன் அங்கு குடியிருந்த சுமார் 40 குடும்பங்களும் நகர்த்தப்பட்டு உள்ளனர்.
.
ரம்பின் சுமார் 3 மணித்தியால நிகழ்வுக்கு இந்தியா சுமார் $12 மில்லியன் செலவழிப்பதாக கூறப்படுகிறது.
.
அமெரிக்காவின் Westinghouse என்ற நிறுவனம் இந்தியாவில் 6 அணுமின் நிலையங்களை அமைக்கும் உடன்பாடு ஒன்றில் கையொப்பம் இடக்கூடும் என்றும் கூறப்படுகிறது.
.