ரஷ்யாவிடம் புதிய Hypersonic ஏவுகணை

Avangard

இன்று வெள்ளிக்கிழமை முதல் ரஷ்யாவின் Avangard என்ற hypersonic ஏவுகணை காவி சேவைக்கு வந்துள்ளது என்று ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சு கூறியுள்ளது. இது இதனுடன் இணைக்கப்பட்ட ஏவுகணையை ஒலியின் வேகத்திலும் 27 மடங்கு அதிக வேகத்தில் காவி சென்று எதிரியை தாக்க வல்லது.
.
ஒலியின் வேகம் Mach 1 ஆக குறிப்பிடப்படும். இந்த ஏவுகணை காவியின் வேகம் Mach 27 ஆக இருக்கும். அதன்படி இது மணித்தியாலத்துக்கு சுமார் 33,000 km வேகத்தில் (33,000 km/h அல்லது 20,500 mph) செல்லும். Mach 1 முதல் Mach 5 வரையான வேகம் supersonic வேகமாகும்.
.
அது மட்டுமன்றி இந்த காவி இடைவழியில் தனது பாதையை திடீரென திருப்ப வல்லது. அதனால் அமெரிக்கா போன்ற நாடுகள் தற்போது கொண்டுள்ள ஏவுகணை எதிர்ப்பு கருவிகள் (missile defence system) இந்த காவியில் வரும் ஏவுகணைகளை தடுக்க முடியாது.
.
இந்த காவி முதலில் ருஷ்யாவின் RS-18B வகை ஏவுகணைகளை காவி செல்லும். பின்னர் தற்போது தயாரிக்கப்படும் Sarmat ஏவுகணைகளை காவி செல்லும்.
.
அமெரிக்காவுக்கும், ரஷ்யாவுக்கும் இடையே தற்போது நடைமுறையில் உள்ள New STAR உடன்படிக்கைக்கு அமைய ரஷ்யா இந்த காவியை அமெரிக்காவுக்கு கடந்த மாதம் காட்டி உள்ளது.
.
தாமும் இவ்வகை ஆயுதத்தை தயாரிக்க முயற்சிப்பதாக அமெரிக்காவின் பாதுகாப்பு செயலாளர் Mark Esper கூறியுள்ளார்.
.