ரஷ்யாவிடம் hyper-sonic ஏவுகணை

Kinzhal

தாம் வெற்றிகரமாக hyper-sonic ஏவுகணை ஒன்றை ஏவியுள்ளதாக ரஷ்யா இன்று ஞாயிரு கூறியுள்ளது. இந்த ஏவுகணை ஒலியின் வேகத்தின் 10 மடங்கு வேகத்தில் செல்ல வல்லது. அதனால் இந்த ஏவுகணையை அமெரிக்காவின் ஏவுகணை பாதுகாப்பு பொறிமுறை (anti-missile defense system) தடுத்து நிறுத்த முடியாது.
.
Kinzhal என்ற இந்த ஏவுகணை ஒரு MiG-31 வகை super-sonic யுத்த விமானத்தில் இருந்து ஏவப்படுள்ளது.
.
இந்த மாதம் 18 ஆம் திகதி இடம்பெறவுள்ள ரஷ்ய தேர்தலில் ஜனாதிபதி பூட்டின் வெற்றிக்கு இந்த ஏவுகணை மேலும் ஒரு காரணமாக இருக்கும்.
.

இந்த ஏவுகணை ஏற்கனவே ரஷ்யாவின் Southern Military District பிரிவுக்குள் பயன்பாட்டுக்கு விடப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
.