ரஷ்யாவின் குண்டுக்கு IS தலைவர் பலி?

Syria

கடந்த மாதம் தாம் சிரியாவில் வீசிய குண்டு ஒன்றுக்கு IS குழுவின் தலைவர் அபு பக்கர் அல் பக்டாடி (Abu Bakr al-Bagdadi) கொலை செய்யப்பட்டு இருந்திருக்கலாம் என்று ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு கருதுகிறது. இதை உறுதிப்படுத்த ரஷ்யா விசாரணைகளை மேற்கொண்டுள்ளது. இந்த செய்தியை ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சு இன்று வெள்ளி அறிவித்து உள்ளது.
.
IS குழுவின் கூட்டம் ஒன்றை நோக்கி மே 28 ஆம் திகதி நடாத்திய தாக்குதல் ஒன்றுக்கே அல் பக்டாடி உட்பட சுமார் 30 தலைமைகளும், 300 அங்கத்தவரும்   பலியாகி இருந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.
.

ஆனால் ரஷ்யாவின் வெளியுறவு அமைச்சர் Sergei Lavrov இவ்விடயத்தில் இதுவரை 100% உறுதிப்பாடு இல்லை என்றுள்ளார். 2015 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் முதல் ரஷ்யா IS மீதான போரில் ஈடுபட்டு வருகிறது.
.