ரஷ்யாவின் பிரதான இரகசிய விமானத்தில் களவு 

ரஷ்யாவின் பிரதான இரகசிய விமானத்தில் களவு 

ரஷ்யாவில் 4 விசேட ‘doomsday’ விமானங்கள் உள்ளன. அதிகூடிய இரகசியங்களை கொண்ட இந்த 4 விமானங்களும் பலத்த பாதுகாப்பை கொண்டிருக்கவேண்டியவை. ஆனால் அதில் ஒரு விமானம் கொண்டிருந்த விசேட இலத்திரனியல் உபகரணங்கள் திருடப்பட்டு உள்ளன. Rostov என்ற மாஸ்கோவுக்கு தெற்கே உள்ள நகரில் இந்த களவு நிகழ்ந்துள்ளது.

மொத்தம் 39 இலத்திரனியல் உபகரணங்களும், 5 ரேடார் உபகாரங்களும் திருடப்பட்டு உள்ளன. இவை Ilyushin Il-80 என்ற வகை விமானத்தில் இருந்துள்ளன.

வல்லரசுகளுக்கு இடையில் யுத்தம் மூண்டு, அது அணுவாயுத யுத்தமாக மாறின், ரஷ்ய சனாதிபதி இந்த விமானத்தில் பறந்தபடியே ரஷ்ய படைகளுக்கு கட்டளையிட முடியும். அத்துடன் இதில் பறந்தபடியே ரஷ்யாவின் அணு ஏவுகணைகளை ஏவவும் முடியும். இது ஒரு பறக்கும் கட்டளை தலைமையகமாக செயல்படும் வசதிகளை கொண்டது.

டிசம்பர் 4 ஆம் திகதியே களவு போலீசாரிடம் முறையிடப்பட்டு உள்ளது. இறுதியாக நவம்பர் மாதம் 26 ஆம் திகதி அனைத்து உபகரணங்களும் உரிய இடத்தில் இருந்துள்ளன.

அமெரிக்காவிடமும் இவ்வகை விமானங்கள் உண்டு. அவை E-4B என்று அழைக்கப்படும்.