ரஷ்யாவில் Victory Day, மேற்கு புறக்கணிப்பு

T-14

வரும் 9ஆம் திகதி ரஷ்யா தனது Victory Day ஐ கொண்டாடவுள்ளது. ஹிட்லரின் படைகளை வென்று 70 ஆண்டுகள் பூர்த்தி அடைந்ததை முன்னிட்டே இந்த Victory Day ஊர்வலம் இடம்பெறவுள்ளது. ஆனால் அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்சு போன்ற மேற்கு நாடுகள் உக்கிரேன் விவகாரம் காரணமாக இந்த கொண்டாட்டத்தை புறக்கணிக்கவுள்ளன. அதேவேளை இந்தியா, சீனா போன்ற நாடுகள் பங்கு கொள்ளவுள்ளன.
.
இந்த ஊர்வலத்தில் 16000 ரஷ்ய படையினரும், 1300 வெளிநாட்டு படையினரும், 200 கவச வாகனங்களும், 150 யுத்த விமானக்களும் பயன்படுத்தப்படும்.
.
இந்த ஊர்வலத்தில் ரஷ்யா தனது நவீன tank ஆனா T-14 ஐயும் ஊர்லவலம் விடவுள்ளது. ஆட்கள் எவரையும் உட்கொள்ளாது இயங்கக்கூடிய T-14 தாங்கியானது உலகில் தற்போதுள்ள எல்லா தாங்கிகளையும் விட நவீனமானது. தொலைவில் இருந்தே இயக்கக்கூடிய இது guided missiles களையும் ஏவக்கூடியது. ஆண்டு 2020 அளவில் ரஷ்யா சுமார் 2300 T-14 களை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.
.
ஜேர்மன் தலைவர் Angela Merkel 10ஆம் திகதி நிகழ்வொன்றில் மட்டும் கலந்து கொள்வார்,