ரஷ்யா விமானம் எகிப்தில் வீழ்ந்தது, 224 பலி

7K9268

ரஷ்யாவின் Metrojet விமான சேவைக்கு சொந்தமான AirBus A321 வகை பயணிகள் விமானம் (flight 7K9268) ஒன்று எகிப்தின் Sinai குடாவில் வீழ்ந்ததால் 224 உயிர்கள் பலியாகி உள்ளன. அதில் 17 சிறுவர்கள் உட்பட 217 பயணிகளும், 7 பணியாளர்களும் இருந்துள்ளனர். இந்த விபத்து உள்ளூர் நேரப்படி சனி காலை 6:14 மணிக்கு இடம்பெற்றுள்ளது.
.
செங்கடல் (Red Sea) கரையோரம் உள்ள Sharm el-Sheikh என்ற உல்லாச பயண நகரில் இருந்து ரஷ்யாவின் St Petersburg நகர் சென்ற விமானமே இவ்வாறு வீந்துள்ளது. இதில் பயணித்தோர் பலரும் ரஷ்ய நாட்டவரே.
.

இந்த விமானம் மேலேறி சுமார் 6 நிமிடங்களுள் விபத்தை சந்தித்துள்ளது. ரேடார் தரவுகளின்படி விபத்துக்கு முன் இந்த விமானம் 30,000 அடி உயரத்தில் பறந்து உள்ளது.