ரஷ்ய ஜானாதிபதி தேர்தலில் மீண்டும் பூட்டின்

Putin

2018 ஆம் ஆண்டில் ரஷ்யாவில் இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி பூட்டின் (Vladimir Putin) மீண்டும் போட்டியிடவுள்ளார். இந்த அறிவிப்பை பூட்டின் இன்று தொழில்சாலை ஒன்றுக்கான பயணத்தின்போது விடுத்துள்ளார்.
.
Boris Yeltsin ஆட்சிக்கு பின், அவரால் தெரிவு செய்யப்பட்டு ஆட்சிக்கு வந்திருந்த பூட்டின் 2000 ஆம் ஆண்டில் இருந்து ரஷ்யாவின் பலம் மிக்க தலைவராக இருந்து வந்துள்ளார். ரஷ்ய சட்டம் காரணமாக 2008 ஆம் ஆண்டு முதல் 2012 ஆம் ஆண்டு வரை பூட்டின் தனக்கு நம்பிக்கையான ஒருவரை ஜனாதிபதியாக நிறுத்தி, தான் பிரதமராக பதவி வகித்திருந்தார். அப்போதும் பூட்டினே மறைமுகமாக தலைமையில் இருந்தார்.
.

அடுத்தும் பூட்டின் தெரிவு செய்யப்படால், Joseph Stalin க்கு அடுத்ததாக நீண்டகாலம் ரஷ்யாவை ஆண்ட தலைவராக பூட்டின் இருப்பார்.
.