ரஷ்ய விமானம் வீழ்ந்ததில் 92 பேர் பலி

TU-154

ரஷ்யாவின் விமானம் ஒன்று கருங்கடலில் வீழ்ந்ததில் 92 பலியாகியுள்ளனர் என்று கூறப்படுள்ளது. ரஷ்யாவின் Sochi என்ற நகரில் இருந்து சிரியா நோக்கி சென்ற Tu-154 வகை விமானமே இன்று ஞாயிரு கருங்கடலுள் வீழ்ந்துள்ளது. விபத்துக்கான காரணம் இன்னமும் தெரியவில்லை.
.
மொத்தம் 84 பயணிகளும், 8 பணியாளர்களும் இராணுவத்துக்கு சொந்தமான இந்த விமானத்தில் இருந்துள்ளார். ரஷ்யாவின் இராணுவ இசைக்குழு ஒன்றின் (Alexandrov Ensemble அல்லது Red Army Choir) 64 உறுப்பினரும் இந்த பயணிகளுள் அடங்குவர்.விமானம் மேலேறி இரண்டு நிமிடங்களுள் விபத்து இடம்பெற்று உள்ளது.
.
ஞாயிரு மாலை வரை 10 உடல்கள் மீட்கப்பட்டு உள்ளதாக ரஷ்ய இராணுவ பேச்சாளர் Mai-Gen Igor Konashenkov கூறியுள்ளார்.

.